தோகைமலை ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தர்ணா


தோகைமலை ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தர்ணா
x
தினத்தந்தி 21 Feb 2019 4:15 AM IST (Updated: 21 Feb 2019 2:31 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாத தோகைமலை ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஒன்றிய அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

தோகைமலை,

தோகைமலை வாரச்சந்தையை சுத்தப்படுத்தி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும், ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சிகளில் குடிநீர் பற்றாக்குறையை போக்க வேண்டும், கீழவெளியூரில் துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாத தோகைமலை ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஒன்றிய அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். இதற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் இலக்குவன், கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தர்ணாவில் ஈடுபட்டவர்களை, ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதல் பெற்று கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஒரு மாதத்தில் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும் என்று கட்சி நிர்வாகிகள் கூறி விட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story