ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்


ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 21 Feb 2019 4:15 AM IST (Updated: 21 Feb 2019 2:58 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.வினருக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விழுப்புரம்,

விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று விழுப்புரத்தில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், தமிழக சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார். ஏழுமலை எம்.பி., சக்கரபாணி எம்.எல்.ஏ., மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் முரளி என்கிற ரகுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:-

மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா வருகிற 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாளை சீரும், சிறப்புமாக கொண்டாட வேண்டும்.

குறிப்பாக ஒவ்வொரு கிளைகள்தோறும் கட்சி கொடியேற்றி வைத்து ஏழை, எளிய மக்களுக்கு தங்களால் இயன்ற நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். அ.தி.மு.க.வில் உள்ள ஒவ்வொரு அணி நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், ஏழை மக்களுக்கு உதவிடும் வகையில் நலத்திட்டங்களை வழங்க வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், பேட்டை முருகன், முத்தமிழ்செல்வன், விநாயகம், சிந்தாமணிவேலு, முன்னாள் ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு, திண்டிவனம் நகரமன்ற முன்னாள் தலைவர் வெங்கடேசன், துணைத்தலைவர் ஷெரீப், வளவனூர் நகர செயலாளர் சங்கரலிங்கம், முன்னாள் பேரூராட்சி தலைவர் முருகவேல், கண்டமங்கலம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் சர்மிளாதேவி நெடுஞ்செழியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் எசாலம்பன்னீர், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைத்தலைவர் வண்டிமேடு ராமதாஸ், மாவட்ட கூட்டுறவு அச்சக துணைத்தலைவர் குமரன், நகர பேரவை செயலாளர் கோல்டுசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story