கமுதி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்; விற்பனையாளர்களுக்கு அபராதம்


கமுதி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்; விற்பனையாளர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 21 Feb 2019 4:00 AM IST (Updated: 21 Feb 2019 2:59 AM IST)
t-max-icont-min-icon

கமுதி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் விற்பனையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.

கமுதி,

தமிழக அரசு மாநிலம் முழுவதும் ஒருமுறை பயன்படுத்தக்கூடியபிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றிலும் தடை விதித்துள்ளது. அதனை தொடர்ந்து இதுபற்றி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் பயனாக தற்போது பெரும்பாலான இடங்களில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களும் நாளடைவில் து ணிப்பைகள் உள்ளிட்ட மாற்று பொருட்களை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். மேலும் அனைத்து பகுதிகளிலும் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கமுதி பேரூராட்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இன்னும் புழக்கத்தில் இருந்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது. இந்த பகுதிக்கு மதுரை, விருதுநகர் போன்ற பகுதிகளில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வரப்பட்டு கடைகளிலும், வணிக நிறுவனங்களிலும் தாராளமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதனை தொடர்ந்து செயல் அலுவலர் இளவரசி தலைமையில் பேரூராட்சி பணியாளர்களும், வருவாய் த்துறையினரும் பேக்கரி, பூக்கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட் டனர். அப்போது கடைகள் மற்றும் குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 40 கிலோ பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story