அருப்புக்கோட்டை அருகே குப்பைக்கிடங்கில் தீவிபத்து


அருப்புக்கோட்டை அருகே குப்பைக்கிடங்கில் தீவிபத்து
x
தினத்தந்தி 22 Feb 2019 4:30 AM IST (Updated: 22 Feb 2019 12:22 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டை அருகே குப்பைக்கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டது.

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாலையம்பட்டியில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் 4 வழிச்சாலையில் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் சேகரித்து மலைபோல குவித்து வைக்கப்படுகிறது. இதன் அருகே துணை மின்நிலையமும் உள்ளது. இங்கு இருந்துதான் சுற்றுப்புற கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்று குப்பைக்கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமள வென அனைத்து பகுதியிலும் பரவியது. இதுகுறித்து துணை மின்நிலைய அதிகாரிகள் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழியில் இருந்து நாகராஜன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தார்கள். எனினும் நீண்ட நேரம் புகை வந்து கொண்டே இருந்தது. தீப்பற்றி எரிந்தபோது ஏற்பட்ட புகை மூட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதித்தது.

Next Story