படைப்புழு தாக்குதலில் 54,894 எக்டேர் மக்காச்சோளப் பயிர் பாதிப்பு விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் படைப்புழு தாக்குதலில் 54 ஆயிரத்து 894 எக்டேர் பரப்பில் மக்காச்சோளப் பயிர் பாதிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் மகாதேவன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன், உதவி கலெக்டர்கள் சிம்ரான்ஜித்சிங் கலோன், விஜயா, மணிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், அரசின் நிவாரண உதவிகள், பயிர் காப்பீட்டு தொகை விரைந்து கிடைப்பது இல்லை. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறோம். ஆகையால் நாங்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். மாவட்ட நிர்வாகத்துக்கு வரும் நிதியை விவசாயிகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் கொடுத்துவிட்டு, விவசாயிகளுக்கு நிதி வரும் போது, மாவட்ட நிர்வாகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர். தொடர்ந்து விவசாயிகள் தட்டு ஏந்தி பிச்சை எடுப்பது போன்று நூதன போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
விளாத்திகுளம் தாலுகா புதூர் ஒன்றியத்தில் போதிய மழை இல்லாததால் 5 ஆயிரம் எக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த மிளகாய் செடி பாதிக்கப்பட்டு உள்ளது. ஆகையால் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு அரசு நிவாரண உதவித் தொகை வழங்குகிறது. இந்த திட்டத்துக்கான கணக்கெடுப்பு பணி வறுமைக்கோடு பட்டியல் அடிப்படையில் நடக்கிறது. இந்த பட்டியலை அந்தந்த பஞ்சாயத்துகளில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். இதனால் விடுபட்ட மக்கள் தங்கள் பெயரை சேர்த்துக் கொள்வதற்கு வசதியாக இருக்கும். தற்போது நெல் அறுவடை நடந்து வருகிறது. இதனால் விவசாயிகள் உளுந்து பயிரிட உள்ளனர். ஆனால் உளுந்து விதைகள் இருப்பு இல்லை. ஆகையால் உளுந்து விதை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாசரேத் அருகே உள்ள வெள்ளரிக்காயூரணி குளத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டும். மணிமுத்தாறு 3-வது ரீச்சில் கால்வாயின் நடுவே தடுப்பு அமைத்து கொடுத்ததற்கு நன்றி தெரிவிக்கிறோம். அதே போன்று புத்தன் தருவை குளத்தை தூர்வார வேண்டும். பன்னம்பாறை குளத்துக்கான வரத்து கால்வாய் தூர்வாரப்படவில்லை. இதனால் அந்த குளத்துக்கு தண்ணீர் வராமல் உள்ளது. ஆகையால் அந்த கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரம்பள்ளம் குளத்தை தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். ஆவல்நத்தம் கூட்டுறவு சங்கத்தில் பயிர்காப்பீடு வழங்குவதில் முறைகேடு நடந்து உள்ளது. சங்கத்தில் உள்ள போலி உறுப்பினர்களை நீக்க வேண்டும்.
இதற்கு பதில் அளித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:-
பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் வழங்கப்பட்டு உள்ளது. ஆறுமுகமங்கலம் இணைப்பு கால்வாயில் தண்ணீர் திறப்பதை நிறுத்தினால்தான், கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரும் என்று கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் அந்த இணைப்பு கால்வாய் மூடப்பட்டு உள்ளது. நங்கைமொழி பகுதியில் ரூ.20 லட்சம் செலவில் தடுப்பணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பயிர் காப்பீட்டை பொறுத்தவரை இந்த மாதம் ரூ.4 கோடியே 46 லட்சம் காப்பீட்டு தொகை வந்து உள்ளது. இதுவரை மொத்தம் ரூ.314 கோடி பெறப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் மக்காச்சோளம் பயிரில் படைப்புழு தாக்குதல் காணப்பட்டது. இது தொடர்பாக கணக்கெடுக்கும் பணி நடந்தது. இதில் 54 ஆயிரத்து 894 எக்டேர் பரப்பில் பயிரிடப்பட்டு இருந்த மக்காச்சோளம் பயிர் படைப்புழு தாக்குதலால் சேதம் அடைந்து உள்ளது. இதனால் 40 ஆயிரத்து 508 விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு அரசு நிவாரணத் தொகை வழங்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
மாவட்டத்தில் 10 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும். தற்போது பேய்க்குளம், ஆழ்வார்திருநகரி, நாசரேத் ஆகிய 3 இடங்களில் முதல் கட்டமாக திறக்கப்பட்டு உள்ளது. வசவப்பபுரத்தில் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 8 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் உளுந்து, பாசிப்பயறு கொள்முதல் செய்யப்படுகிறது. இதுவரை 23.60 டன் உளுந்து, பாசிப்பயறு கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. இன்னும் 54 டன் உளுந்து, 12 டன் பாசிப்பயறு கொள்முதல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்குகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 669 விவசாயிகள் உள்ளனர். இந்த விவசாயிகள் குறித்து ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இதுவரை 40 ஆயிரம் விவசாயிகள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளனர்.
உளுந்து விதை கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். புத்தன்தருவைகுளத்தை தூர்வாருவதற்கு அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டு உள்ளது. அந்த குளம் ஆழப்படுத்துவதற்கு அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு பணிகள் தொடங்கப்படும். கோரம்பள்ளம் குளத்தில் ரூ.11.3 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கூட்டுறவு சங்க முறைகேடு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story