அருணாசலேஸ்வரர் கோவிலில் தங்கத்தேர் வெள்ளோட்டம் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்


அருணாசலேஸ்வரர் கோவிலில் தங்கத்தேர் வெள்ளோட்டம் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 22 Feb 2019 11:00 PM GMT (Updated: 22 Feb 2019 4:03 PM GMT)

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தங்கத்தேர் வெள்ளோட்டத்தை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தங்கத்தேரை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து தேர் புனரமைக்கும் பணிகள் நடைபெற்றது.

இந்த நிலையில் தங்கத்தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. அமைச்சர் எஸ்.சேவூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். அரோகரா.... அரோகரா... என்ற பக்தி கோஷங்கள் முழங்க தேர் கோவிலின் 3-வது பிரகாரத்தை சுற்றி வந்தது. முன்னதாக பூஜை செய்யப்பட்ட புனிதநீர் கலசங்களில் கொண்டு வரப்பட்டு தேர் மற்றும் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அ.தி.மு.க. விவசாய பிரிவு மாநில செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் தூசி கே.மோகன், பன்னீர்செல்வம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி, முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அரங்கநாதன், நளினிமனோகரன், திருவண்ணாமலை நகர்ப்புற கூட்டுறவு சங்க தலைவர் டிஸ்கோ எஸ்.குணசேகரன், 7-வது வட்ட பிரதிநிதி மணிகண்டன், மாவட்ட இணை செயலாளர் அமுதாஅருணாசலம், வேட்டவலம் கவிதாசெந்தில்குமரன்,எஸ்.ஆர்.விஜயகுமார் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை நகர செயலாளர் ஜே.எஸ்.செல்வம் செய்திருந்தார்.

அதைத்தொடர்ந்து திருவூடல் தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. தெற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தை அமைச்சர் சேவூர்எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், இந்த அலுவலகத்தில் பொதுமக்கள் எப்போதும் தங்களது புகார்களை தெரிவிக்கலாம். இங்கு 2 ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அலுவலகத்தில் நான் இல்லாத நேரத்தில் மனுக்களை அவர்களிடம் வழங்கலாம். மக்கள் பிரச்சினை உடனுக்குடன் தீர்க்கப்படும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களுக்கு கட்சியினர் ஆதரவுஅளிக்கவேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story