ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்துக்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் நெல்லை கலெக்டர் தகவல்
ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் பயன்பெற சிறு, குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார்.
நெல்லை,
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் அனைத்து சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்குவது தொடர்பாக நெல்லை மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் உள்ள தகுதியான விவசாயிகளிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்களில் வருகிற 25-ந் தேதி முதல் (திங்கட்கிழமை) முதல் 27-ந் தேதி வரை தங்கள் நிலங்கள் குறித்து சரியான ஆவணங்களை (பட்டா நகல்) மற்றும் வங்கி கணக்கு விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1-2-2019 அன்று 2 ஹெக்டேர் அல்லது 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் உள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் பயன்பெற சிறு, குறு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்கள் மற்றும் தாலுகா அலுவலகங்களில் வருகிற 25-ந் தேதி முதல் (திங்கட்கிழமை) முதல் 27-ந் தேதி வரை தங்கள் நிலங்கள் குறித்து சரியான ஆவணங்களை (பட்டா நகல்) மற்றும் வங்கி கணக்கு விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1-2-2019 அன்று 2 ஹெக்டேர் அல்லது 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் உள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story