சிங்காரப்பேட்டை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் பலாத்காரம் மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு


சிங்காரப்பேட்டை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் பலாத்காரம் மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 23 Feb 2019 3:45 AM IST (Updated: 22 Feb 2019 11:26 PM IST)
t-max-icont-min-icon

சிங்காரப்பேட்டை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஊத்தங்கரை, 

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே உள்ள நரசம்பட்டியை சேர்ந்தவர் 40 வயது பெண். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். சம்பவத்தன்று இவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம ஆசாமி ஒருவர் உள்ளே நுழைந்தார்.

பின்னர் அவர் அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து அறிந்த அப்பெண்ணின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் அவர்கள் இது குறித்து சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story