ஆசிரியர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்


ஆசிரியர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 23 Feb 2019 3:30 AM IST (Updated: 22 Feb 2019 11:30 PM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிருஷ்ணகிரி, 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வட்டாரக்கிளை பொதுக்குழு கூட்டம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார தலைவர் பவுல்ராஜ் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் அருண்பிரகாஷ்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் மதிவாணன், மாவட்ட துணைத் தலைவி மரியசாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புரவலர் கிருஷ்ணாஜி, மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் பேசினர்.

இக்கூட்டத்தில், ஆசிரியர்களை மீண்டும் பணியில் சேர அனுமதி அளித்த கல்வித்துறை அமைச்சருக்கும், அரசுக்கும் நன்றி தெரிவிப்பது. ஆசிரியர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற அரசை இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்வது. ஆசிரியர்கள் பணியில் மீண்டும் சேர மாநில அமைப்பு எடுத்த தொடர் நிகழ்வுக்கு நன்றி தெரிவிப்பது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் செயல் பாடுகளை தொடர்ந்து செய்யவும் அதற்கான நடவடிக்கைக்கும் ஒப்புதல் பெறப்பட்டது. ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு, மே 10-ந் தேதி அன்று பாரட்டுவிழா நடத்துவது.

ஏப்ரல் மாதம் முதல் மாதத்தில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் என்றும், அதற்கான குழு விரைவில் அறிவித்து பணியை அக்குழு மேற்கொள்ளும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டம் முடிந்த பின் பள்ளி வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே காஷ்மீர் குண்டு வெடிப்பில் இறந்த இந்திய வீரர்களுக்கு மலர் வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் டேவீஸ், ரோஸ்லின்மேரி, தவச்செல்வி, துணை பொருப்பாளர்கள் இசபெல்லாராணி, அனிதா, பிரியதர்சினி, மாவட்டதலைவர் ரங்கப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் அனுராதா நன்றி கூறினார்.

Next Story