வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடக்கிறது


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடக்கிறது
x
தினத்தந்தி 23 Feb 2019 3:30 AM IST (Updated: 22 Feb 2019 11:44 PM IST)
t-max-icont-min-icon

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

நாமக்கல், 

இகு குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 1-ந் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் திருத்தப் பணிகள் நடந்து வருகிறது. இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயரை பதிவு செய்து கொள்ளாதவர்களும், 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்களும் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, விண்ணப்பங்களை அந்தந்த தாசில்தார் அலுவலகங்கள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் அளித்து பதிவு செய்துகொள்ளலாம்.

இதன் தொடர்ச்சியாக இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 661 வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெறும் இந்த முகாம்களில், வாக்குச் சாவடி மைய அலுவலர்கள் விண்ணப்பங்களை பெற உள்ளனர். அதற்காக வாக்காளர் பட்டியல்கள் மற்றும் உரிய படிவங்களுடன் மையங்களில் அவர்கள் இருப்பார்கள். எனவே வாக்காளர்கள் விண்ணப்பங்களை அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அதேபோல் வாக்காளர்கள் புகைப்பட அடையாள அட்டைகளை பெறுவதற்கு ஏதுவாக நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம், கொல்லிமலை, பரமத்திவேலுார், திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் ஆகிய இடங்களில் உள்ள தாசில்தார் அலுவலகங்களிலும், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் உள்ள அரசு இ-சேவை மையத்திலும் உரிய கட்டணம் செலுத்தி வாக்காளர்கள் தங்களின் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story