அங்கன்வாடி பணியாளர்களுக்கான நேர்காணல் 14 காலி இடத்திற்கு 557 பெண்கள் வந்திருந்தனர்
பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்களுக்கான நேர்காணல் நேற்று நடந்தது. இதில் 14 காலி இடத்திற்கு 557 பெண்கள் வந்திருந்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் காலியாக உள்ள 14 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 34 அங்கன்வாடி உதவியாளர்கள் பணிகளுக்கு தகுதியானவர்கள் கடந்த 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி 1.1.2019-ல் 26 முதல் 35 வயதுக்கு உட்பட்ட பெண்கள், மலைப்பகுதியில் வசிக்கும் அதிகபட்சம் 40 வயதுடைய பெண்கள், குறைந்த பட்சம் 20 வயதுடைய பெண்கள், கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என 700-க்கும் மேற்பட்ட பெண்கள் அங்கன்வாடி பணியாளர்கள் பணிக்கு விண்ணப்பித்திருந்தனர்.
அவர்களுக்கு நேர்க்காணலுக்கான அழைப்பு கடிதம் முன்னதாகவே அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி அங்கன்வாடி பணியாளர்களுக்கான காலி பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறை அதிகாரி பூங்கொடி தலைமையில் நேர்காணல் நேற்று நடைபெற்றது. இதில் பெரம்பலூர் வட்டாரத்தில் 1 அங்கன்வாடி பணியாளர் காலி இடத்திற்கு 64 பேரும், வேப்பூரில் 5 இடத்திற்கு 183 பேரும், ஆலத்தூரில் 3 இடத்திற்கு 111 பேரும், வேப்பந்தட்டையில் 5 இடத்திற்கு 199 பேரும் என மாவட்டத்தில் மொத்தம் 14 அங்கன்வாடி பணியாளர்கள் காலி பணியிடத்திற்கான நேர்காணலுக்கு மொத்தம் 557 பேர் வந்திருந்தனர் அவர்களுக்கு வட்டார அளவில் தனித்தனியாக 4 இடங்களில் அதிகாரிகள் நேர்க்காணலை நடத்தினர். அதில், அவர்களின் கல்விச்சான்று, வயது சான்று, சாதி சான்று ஆகியவற்றை அதிகாரிகள் பார்வையிட்டனர். இதேபோல் மாவட்டத்தில் காலியாக உள்ள 34 அங்கன்வாடி உதவியாளர் பணிக்கான நேர்க்காணல் இன்று (சனிக்கிழமை) காலை பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

Related Tags :
Next Story