சென்னையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் இன்று நடக்கிறது
சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
நாடாளுமன்ற தேர்தலையொட்டி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும் அந்த பட்டியலில் வாக்காளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளனவா? என சரிபார்த்துக்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டன.
தற்போது வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், தங்களுடைய பெயரை சேர்த்துக்கொள்ள சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
தேர்தலின் போது மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகளை செய்வதற்காக, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அனைவரும் தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் அடையாள அட்டையின் எண் விவரங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story