நாகையில் எலி மருந்தை தின்று வயதான தம்பதி தற்கொலை
நாகையில், எலி மருந்தை தின்று வயதான தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.
நாகப்பட்டினம்,
நாகை வெளிப்பாளையம் ரெயிலடி தெருவை சேர்ந்தவர் அய்யர் தேவர்(வயது 74). இவருடைய மனைவி பவளக்கொடி(60). இவர்களுக்கு பிரபாகர், சுதாகர், தினகரன் என 3 மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அய்யர் தேவரும், பவளக்கொடியும் சுதாகரின் வீட்டில் வசித்து வந்தனர்.
சுதாகர் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதாகவும் இதனால் அய்யர் தேவரும், பவளக்கொடியும் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இருவரும் எலி மருந்தை(விஷம்) தின்றுள்ளனர். நேற்று காலையில் அவர்களது அறை கதவு வெகு நேரமாக திறக்காமல் இருந்தது. இதனால் சுதாகர் ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது தனது தாயும், தந்தையும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடல்களையும் கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வயதான தம்பதி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story