‘அரசியலில் கமல்ஹாசன் ஒரு குழந்தை’ கே.பி.முனுசாமி பேட்டி


‘அரசியலில் கமல்ஹாசன் ஒரு குழந்தை’ கே.பி.முனுசாமி பேட்டி
x
தினத்தந்தி 23 Feb 2019 4:00 AM IST (Updated: 23 Feb 2019 2:53 AM IST)
t-max-icont-min-icon

‘அரசியலில் கமல்ஹாசன் ஒரு குழந்தை’ என அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறினார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு 120 ஜோடிகளுக்கு திருமணம் திருவாரூரில் நடந்தது. திருமண விழாவில் கலந்து கொண்ட அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறிய தாவது:-

அரசியல் கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அ.தி.மு.க. ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பேச்சுவார்த்தை முடிவடைந்தவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகள் பற்றி வெளிப்படையாக அறிவிப்போம். பா.ம.க., என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டு உள்ளது.

அ.தி.மு.க.வை தொடர்ந்து விமர்சனம் செய்து வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அரசியலில் ஒரு குழந்தை. குழந்தை பேசுவதை பெரியவர்கள் பெரிதுபடுத்த மாட்டார்கள்.

அவருடைய கருத்துக்கு அரசியல் ரீதியாக பதில் கருத்து தெரிவிக்கும் அளவுக்கு அவர் இன்னும் வளரவில்லை. தற்போது அ.தி.மு.க. அமைத்து வரும் கூட்டணி கொள்கை அடிப்படையிலானது அல்ல. எண்ணிக்கை அடிப்படையில் கூட்டணி அமைத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story