திருவள்ளூரில் வரி பாக்கி வைத்துள்ள கடைகள் முன்பு குப்பை தொட்டிகள் நகராட்சி ஆணையர் நடவடிக்கை


திருவள்ளூரில் வரி பாக்கி வைத்துள்ள கடைகள் முன்பு குப்பை தொட்டிகள் நகராட்சி ஆணையர் நடவடிக்கை
x
தினத்தந்தி 23 Feb 2019 3:14 AM IST (Updated: 23 Feb 2019 3:14 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் வரி பாக்கி வைத்துள்ள கடைகள் முன்பு குப்பைத்தொட்டிகள் வைத்து நகராட்சி ஆணையர் மாரிச்செல்வி நடவடிக்கை மேற்கொண்டார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இதில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள், வணிக வளாகங்கள் இயங்கி வருகிறது. அவ்வாறாக நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருபவர்கள் சரியான முறையில் வரி செலுத்தாமல் இருந்துள்ளனர். அவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் பாக்கியுள்ள வரியை செலுத்தக்கோரி பலமுறை நோட்டீஸ் வழங்கியது.

இருப்பினும் சில கடைக்காரர்கள் முறையாக வரி செலுத்தாமல் இருந்தனர். அவர்களில் 4 கடைக்காரர்கள் கடந்த 8 ஆண்டுகளாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்தை செலுத்தாமல் பாக்கி வைத்திருந்தனர்.

குப்பை தொட்டிகள்

நகராட்சியினர் பல முறை அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கியும் இது நாள்வரையிலும் வரி பாக்கி தொகையை செலுத்தவில்லை. இதைத்தொடர்ந்து திருவள்ளூர் நகராட்சி ஆணையர் மாரிச்செல்வி உத்தரவின்பேரில் வருவாய் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் நகராட்சி பணியாளர்கள் 8 ஆண்டுகளாக நகராட்சிக்கு வரி செலுத்தாமல் இருந்த 4 கடைகள் முன்பு குப்பை தொட்டிகளை வைத்தனர்.

வரி பாக்கி தொகையை அவர்கள் செலுத்த தவறினால் மேற்கண்ட கடைகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story