வேலூரில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 மெயின் தேர்வை 614 பேர் எழுதினர்


வேலூரில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 மெயின் தேர்வை 614 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 24 Feb 2019 3:30 AM IST (Updated: 23 Feb 2019 10:24 PM IST)
t-max-icont-min-icon

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 மெயின் தேர்வு நேற்று நடந்தது. வேலூரில் 614 பேர் எழுதினர்.

வேலூர், 

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 மெயின் தேர்வு நேற்று நடந்தது. வேலூர் மாவட்டத்தில் 659 பேர் தேர்வு எழுதுவதற்காக வேலூர் தோட்டப்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

நேற்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. தேர்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தேர்வு எழுத வந்த அனைவரும் தீவிர சோதனை செய்யப்பட்டனர். அவர்கள் செல்போன், கால்குலேட்டர் உள்பட எலக்ட்ரானிக் பொருட்கள் தேர்வு மையங்களுக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

மொத்தம் 659 பேர் தேர்வு எழுதுவதற்கு வசதிகள் செய்யப்பட்டிருந்ததில் 45 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதனால் 614 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.

தோட்டப்பாளையத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் பார்வையற்ற 5 பேர் தேர்வு எழுதினர். அவர்கள் சொல்வதை எழுதுவதற்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

தேர்வு நடந்த மையங்களில் முறைகேடுகள் நடக்காமல் இருக்கும் வகையில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தேர்வு மையங்களுக்குள் தேர்வு எழுத வந்தவர்கள் தவிர மற்ற யாரும் அனுமதிக்கப்படவில்லை.

Next Story