ஊத்துக்கோட்டை அருகே 5 கிலோமீட்டர் தூர குடிநீர் குழாய் இணைப்பு 40 ஆண்டு கால குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு
ஊத்துக்கோட்டை அருகே 40 ஆண்டுகளாக நிலவி வந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாக 5 கிலோமீட்டர் தூரத்துக்கு குடிநீர்குழாய் இணைப்பு அமைக்கப்பட்டது.
ஊத்துக்கோட்டை,
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே ஒதப்பை கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கிராம எல்லையில் உள்ள கொசஸ்தலை ஆற்றங்கரையில் அமைத்துள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஆற்றில் தண்ணீர் தேங்கி நிற்பதால் கிராமத்தில் குடிநீர் வினியோகம் தங்கு தடையின்றி சீராக நடைபெறுகிறது.
அதன்பிறகு கிராமத்தில் ஊராட்சி நிர்வாகம் டேங்கர் லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்கிறது. டேங்கர் லாரிகளில் குடிக்க மட்டும் தண்ணீர் வினியோகிக்கப்படுவதால் கிராம மக்கள் துணிகள் துவைக்க, பாத்திரங்கள் கழுவ கிராம எல்லையில் உள்ள ஏரி நீரை பயன்படுத்தி வந்தனர்.
பருவ மழை பொய்த்து, ஏரியும் வரண்டு போனதால் துணிகள் துவைக்க, பாத்திரங்கள் கழுவ தண்ணீர் இன்றி கிராம மக்கள் அவதிப்பட்டு வந்தனர். 40 ஆண்டுகளாக இந்த நிலை தொடருவதாக கிராம மக்கள் வருத்தத்துடன் கூறினர். இந்த பிரச்சினையை தீர்த்து வைக்கக்கோரி கும்மிடிப்பூண்டி தொகுதி மக்கள் விஜயகுமார் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு அளித்தனர். அதன்படி அவர் தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.36 லட்சத்தை ஒதுக்கினார்.
இந்த நிதியை கொண்டு திருவள்ளூர் அருகே உள்ள பூதூர் கிராம எல்லையில் ராட்சத ஆழ்துளை கிணறு அமைத்து அங்கிருந்து 5 கிலோமீட்டர் தூரத்துக்கு குடிநீர் குழாய் இணைப்பு அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் விஜயகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குடிநீர் வினியோகத்தை தொடங்கி வைத்தார். இதில் பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், ஒன்றிய குழு முன்னாள் தலைவர் அம்முமாதவன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் வெங்கடரமணா, பிரசாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story