விடுதலை ஆணை எப்போது வரும் என ஒவ்வொருநாளும் காத்திருக்கிறேன் முதல்-அமைச்சருக்கு நளினி கடிதம்


விடுதலை ஆணை எப்போது வரும் என ஒவ்வொருநாளும் காத்திருக்கிறேன் முதல்-அமைச்சருக்கு நளினி கடிதம்
x
தினத்தந்தி 24 Feb 2019 3:00 AM IST (Updated: 24 Feb 2019 12:46 AM IST)
t-max-icont-min-icon

விடுதலை ஆணை எப்போது வரும் என்று எதிர்பார்த்து ஒவ்வொருநாளும் காத்திருப்பதாக வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினி, முதல்-அமைச்சருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

வேலூர், 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இவர்கள் உள்பட 7 பேர் 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். 7 பேரையும் விடுதலைசெய்ய தமிழக கவர்னர் முடிவுசெய்யலாம் என்று சுப்ரீம்கோர்ட்டு கூறி உள்ளது.

இதனால் அவர்களை விடுதலை செய்வதுகுறித்து தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பிவைத்தது. ஆனால் அந்த தீர்மானத்தின்மீது கவர்னர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் வேலூர் பெண்கள் சிறையில் உள்ள நளினி,சிறைத்துறை மூலம் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில் தற்போதைய அரசியல் மாற்றத்தை பயன்படுத்தி எங்களை விடுதலை செய்யவேண்டும். எங்கள் இறுதி நம்பிக்கையாக நீங்கள்தான் இருக்கிறீர்கள். இந்தியாவில் அதிகபட்சம் 27 ஆண்டுகளுக்கு மேல் சிறைதண்டனை அனுபவித்துவரும் பெண் சிறைவாசியான நான் விடுதலை ஆணை எப்போது வரும் என ஒவ்வொருநாளும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

எனவே எங்களை விடுதலை செய்ய தமிழக முதல்-அமைச்சர், கவர்னரை வலியுறுத்தவேண்டும் என்று கூறியிருப்பதாக வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்தார்.

Next Story