வங்கி ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்
காஞ்சீபுரத்தில் வங்கி ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி நடந்தது. அலாரம் ஒலித்ததால் மர்மநபர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
சென்னை,
காஞ்சீபுரம் மாமல்லன் நகரில் பாரத ஸ்டேட் வங்கி உள்ளது. இங்கு ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
நேற்றுமுன்தினம் இரவு அந்த ஏ.டி.எம். மையத்தில் அலாரம் ஒலித்தது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். அங்கு இருந்து 3 பேர் தப்பி ஓடுவது தெரிந்தது.
போலீசார் விசாரணை
இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்கள் யார் என்று விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story