பராமரிப்பு பணி மின்சார ரெயில் சேவைகளில் இன்று மாற்றம்


பராமரிப்பு பணி மின்சார ரெயில் சேவைகளில் இன்று மாற்றம்
x
தினத்தந்தி 24 Feb 2019 4:15 AM IST (Updated: 24 Feb 2019 1:20 AM IST)
t-max-icont-min-icon

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவைகளில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

பேசின்பிரிட்ஜ் மற்றும் வில்லிவாக்கம் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் இன்று (24-ந்தேதி) காலை 10.05 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுவதால் கீழ்க்கண்ட ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

மூர்மார்க்கெட்டில் இருந்து இன்று (24-ந்தேதி) பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு திருத்தணி செல்லும் மின்சார ரெயில், மூர்மார்க்கெட்-ஆவடி இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது. இதேபோல், அரக்கோணம்-மூர்மார்க்கெட்(வ.எண்.43412), திருவள்ளூர்-மூர்மார்க்கெட்(43220), பட்டாபிராம் சைடிங்-மூர்மார்க்கெட்(43110), திருத்தணி-மூர்மார்க்கெட்(43506) ஆகிய மின்சார ரெயில்கள் ஆவடி-மூர்மார்க்கெட் இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.

அதேநாளில், ஆவடி-பட்டாபிராம் சைடிங்குக்கு பிற்பகல் 1.50, மூர்மார்க்கெட்-அரக்கோணத்துக்கு காலை 9.45, அரக்கோணம்-திருத்தணிக்கு காலை 11.55, அரக்கோணம்-திருத்தணிக்கு காலை 11.55, பிற்பகல் 1.50, 2.25, திருவள்ளூர்-மூர்மார்க்கெட்டுக்கு பிற்பகல் 1.15, ஆவடி-அரக்கோணத்துக்கு காலை 11.10 மணிக்கு பயணிகள் ரெயில் இயக்கப்படும்.

மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story