காற்று மாசு இல்லாத 12 ஆயிரம் பஸ்களை இயக்க ஜெர்மன் நாட்டுடன் ஒப்பந்தம் அமைச்சர் பேட்டி


காற்று மாசு இல்லாத 12 ஆயிரம் பஸ்களை இயக்க ஜெர்மன் நாட்டுடன் ஒப்பந்தம் அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 24 Feb 2019 4:45 AM IST (Updated: 24 Feb 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

காற்று மாசு இல்லாத 12 ஆயிரம் பஸ்களை இயக்க ஜெர்மன் நாட்டுடன் ஒப்பந்தம் கையெழுத்திடப் பட்டுள்ளது என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

கரூர்,

கரூர் அமராவதி ஆற்றில் மண்டிக்கிடக்கும் கருவேல மரங்களையும், முட்புதர் களையும் அகற்ற வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக் கையை ஏற்று சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் குறைந்தது 3 மாதத்திற்கு ஒருமுறை அமராவதி ஆற்றில் வளரும் முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுப் பணித் துறையினருக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. போக்குவரத்து துறையில் 2 ஆயிரம் மின்சார பஸ்களை புழக்கத்தில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 500 மின்சார பஸ்கள் சென்னை, மதுரை மற்றும் கோவை நகரங்களில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மேலும், காற்று மாசு இல்லாத 12 ஆயிரம் பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது, இதற் கான ஒப்பந்தம் ஜெர்மன் நாட்டுடன் கையெழுத்திடப் பட்டுள்ளது.

போக்குவரத்து துறையின் மூலம் குறைந்த செலவில், குறைந்த தூரத்திற்கும் குளிர்சாதன வசதியுடன் கூடிய பஸ் விரைவில் அறிமுகப் படுத்தப்படவுள்ளது. அதில் ஒரு பக்கம் 3 இருக்கைகளும், மறுபக்கம் இரண்டு இருக்கைகளுடன் கூடிய வகையில் உருவாக்கப்படும். இந்த குளிர்சாதன வசதியுள்ள பஸ்கள் ஏழை மக்களும் பயணிக்கும் வகையிலான குறைந்த கட்டணத்தில் இயக்கப்பட உள்ளது.

நெடுந்தூர பயணத்திற்கு மட்டுமே குளிர்சாதன பஸ் என்ற நிலையை மாற்றி, குறைந்த தூர பயணத்திற்கும் குளிர்சாதன பஸ்களை விரைவில் முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க இருக்கிறார். முதற்கட்டமாக சென்னை மாநகரில் 50 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்காக அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. தேர் தல் நெருங்கும்போது மேலும் சில கட்சிகள் கூட்டணிக்கு வர வாய்ப் புள்ளது. அதில் தே.மு.தி.க.வும்., அ.தி.மு.க. வின் கூட்டணிக்குள் விரைவில் வரும். இந்த தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story