வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்: மதுரை மாவட்டத்தில் 13,500 பேர் மனு


வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்: மதுரை மாவட்டத்தில் 13,500 பேர் மனு
x
தினத்தந்தி 24 Feb 2019 4:55 AM IST (Updated: 24 Feb 2019 4:55 AM IST)
t-max-icont-min-icon

வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில், மதுரை மாவட்டத்தில் 13 ஆயிரத்து 478 பேர் மனு கொடுத்தனர்.

மதுரை,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளனவா? என்பதை சரிபார்த்து கொள்ள அறிவுறுத்தப்பட்டனர்.

அதன்படி தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் சரிபார்த்துக்கொள்வதற்காக சிறப்பு முகாம் நேற்று நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் நேற்று தங்களுடைய பெயர் பட்டியலில் இருக்கிறதா? என்பதை சரிபார்த்து கொண்டனர். பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் மீண்டும் சேர்த்துக்கொள்வதற்கும், தகுதியுள்ளவர்கள் தங்களுடைய பெயரை சேர்ப்பதற்கும், இடமாற்றம் மற்றும் பெயர் மாற்றம் தொடர்பாகவும் திருத்தம் மேற்கொள்ள விண்ணப்பிக்கவும் செய்தனர்.

சிறப்பு முகாமில் பெயர் சேர்ப்பதற்காக ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 228 பேரும், பெயர் மற்றும் இடமாற்றம் உள்பட இதர காரணங்களுக்காக 48 ஆயிரத்து 3 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 21 ஆயிரத்து 231 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். இதில் அதிகபட்சமாக காஞ்சீபுரத்தில் 13 ஆயிரத்து 550 விண்ணப்பங்களும், குறைந்தபட்சமாக அரியலூரில் 1,349 விண்ணப்பங்களும் பெறப்பட்டு இருக்கின்றன.

ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை மாவட்டங்களில் ஏராளமானவர்கள் மனு அளித்தனர். இதில் மதுரை மாவட்டத்தில் நேற்று நடந்த முகாமில் 13 ஆயிரத்து 478 பேர் மனு அளித்தனர். இதில் புதிதாக பெயர் சேர்க்க 10,908 பேர் மனு அளித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சிறப்பு முகாம் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

Next Story