கலாசாரத்தை காட்சிப்படுத்தும் காலண்டர்


கலாசாரத்தை காட்சிப்படுத்தும் காலண்டர்
x
தினத்தந்தி 24 Feb 2019 3:03 PM IST (Updated: 24 Feb 2019 3:03 PM IST)
t-max-icont-min-icon

மாத காலண்டர்களில் அந்தந்த மாதத்திற்குரிய தேதியும், கிழமையும் பிரதானமாக இடம் பிடித்திருக்கும். கூடவே கண்களை கவரும் விதத்தில் அழகிய டிசைன்களும் பதிக்கப்பட்டிருக்கும்.

மாத காலண்டர்களில் அந்தந்த மாதத்திற்குரிய தேதியும், கிழமையும் பிரதானமாக இடம் பிடித்திருக்கும். கூடவே கண்களை கவரும் விதத்தில் அழகிய டிசைன்களும் பதிக்கப்பட்டிருக்கும். சில காலண்டர்களில் மாத அட்டவணையை விட அழகிய படைப்புகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.

பெரும்பாலும் இயற்கை காட்சிகள், புகழ்பெற்ற இடங்கள், சுற்றுலா தலங்கள், சாமி படங்கள், வியக்கவைக்கும் காட்சிகள் இடம் பிடித்திருக்கும்.

அதுபோல் நிறைய காலண்டர்களில் பெண்களும், மாடல் அழகிகளும், நடிகைகளும் இடம் பிடித்திருப்பார்கள். அதே சாயலில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மாத காலண்டரை உருவாக்கி இருக்கிறார்கள் இரு பெண்கள். அந்த காலண்டரில் இடம் பெற்றிருக்கும் பெண் களின் உருவங்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான ஆடை அலங்காரத்தில் ஜொலிக்கின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தவிதமான புடவைகளை அணிவார்கள்? அவைகளை எந்த மாதிரி டிசைன்களில் உடுத்துவார்கள்? எந்த மாதிரியான அணிகலன்களை அணிவார்கள்? என்பதை சித்தரிக்கும் வகையில் அந்த காலண்டர் காட்சி அளிக்கிறது. புடவை உடுத்துவதிலேயே இத்தனை ஸ்டைல்கள் இருக்கிறதா? என்று ஆச்சரியப்படும் விதத்தில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு மாநில கலாசார உடை உடுத்திருக்கும் பெண்களின் உருவங்கள் மிளிர்கின்றன. இந்த காலண்டரை வடிவமைத்தவர்கள், தான்யா கோட்நாலா - தான்யா சிங்.

இவர்கள் இருவரும் கலை வேலைப்பாடுகள் மீது ஆர்வம் கொண்டவர்கள். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இவர்கள், அங்குள்ள கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் முனைப்புடன் விதவிதமான கலை படைப்புகளை உருவாக்கி வருகிறார்கள். நாட்டின் பல்வேறு மாநில கலாசாரங்களை ஆடை வடிவில் வெளிக்கொண்டு வரும் விதமாக ஓவியங்கள் வரைந்து அதில் அழகிய டிசைன்களை வடித்திருக்கிறார்கள்.

‘‘நாடுமுழுவதும் பெண்களை கவர்ந்த பிரபலமான ஆடையாக புடவைகள் திகழ்கின்றன. அவற்றை உடுத்தி அழகு பார்க்கும் விதம் ஒவ்வொரு பகுதியிலும் மாறுபடுகிறது. அவை தொழில், பண்பாடு, அழகியல், கலாசாரம் போன்ற அம்சங்களை சார்ந்திருக்கின்றன. அவற்றை பிரதிபலிக்கும் விதமாக காலண்டர்கள் உருவாக்க முடிவு செய்தோம். அசாம், மேற்கு வங்காளம், தெலுங்கானா, கர் நாடகா, ஒடிசா, குஜராத் உள்பட 12 மாநிலங்களின் பாரம்பரிய சேலை அணியும் விதத்தை காலண்டரில் சித்தரித்தோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்கிறார், தான்யா கோட்நாலா.

இவர்கள் இருவரும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விஷயங்களை ஓவிய பாணியில் சித்தரிப்பதில் ஆர்வம் கொண்டவர்கள். ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைப்பிடிக்கும் விதத்தில் ஏராளமான சித்திரங்களை இணைய தளங்களில் பதிவிட்டிருக்கிறார்கள். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்திருக்கிறது.

Next Story