முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 115 அடியாக குறைந்தது
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 115 அடியாக குறைந்தது.
கூடலூர்,
தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 152 அடி ஆகும். ஆனால் அணையில் 142 அடி தண்ணீரை வரை தேக்கி வைக்க சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த அணையின் மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் சுமார் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் இரு போக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு பருவமழை பரவலாக பெய்ததால் முல்லைப்பெரியாறு அணை 136.20 அடியை எட்டியது.
இதை நம்பி இந்த பகுதி விவசாயிகள் 2-ம் போக நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்போது அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. மேலும் 2-ம் போக நெல் சாகுபடிக்கு இன்னும் 30 நாட்களில் இருந்து 40 நாட்களுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 115.20 அடியாக உள்ளது. அணைக்கு நீர்்வரத்து வினாடிக்கு 32 கன அடியும், தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக 230 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணையில் 1,763 மில்லியன் கன அடிநீர்் இருப்பு உள்ளது.
இதேநிலை நீடித்தால் தேனி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
Related Tags :
Next Story