கூத்தாநல்லூர், மன்னார்குடியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா


கூத்தாநல்லூர், மன்னார்குடியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா
x
தினத்தந்தி 25 Feb 2019 4:00 AM IST (Updated: 25 Feb 2019 12:50 AM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூர், மன்னார்குடியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

கூத்தாநல்லூர்,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா நேற்று கூத்தாநல்லூரில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகரில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க. கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினர். விழாவில் நகர செயலாளர் பசீர்அகமது, துணைச்செயலாளர் உதயகுமார், பொருளாளர் பாஸ்கரன், நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜசேகரன், நகர ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் காளிதாஸ், மாவட்ட பிரதிநிதி விஜயகுமார், முன்னாள் நகரசபை உறுப்பினர் மீராமைதீன் மற்றும் ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

மன்னார்குடியில் அ.தி. மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மன்னார்குடி மேலராஜவீதி பெரியார் சிலை சந்திப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இதில் மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் டி.கோவிந்தராஜன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம், கூட்டுறவு பால் சங்க தலைவர் எம்.கே.கலியபெருமாள், மன்னார்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வம், முன்னாள் நகராட்சி தலைவர் சுதாஅன்புசெல்வன், தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் மனோகரன், கூட்டுறவு நகர வங்கி தலைவர் ஆர்.ஜி.குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் கலைவாணன், அண்ணா தொழிற்சங்க மாவட்டசெயலாளர் ராஜேந்திரன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு ஜெயலலிதா உருவபடத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னதாக அ.தி.மு.க.வினர் கோபாலசமுத்திரம் கீழவீதியில் உள்ள அ.தி.மு.க அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பெரியார் சிலை சந்திப்பிற்கு வந்தடைந்தனர்.

Next Story