இருகூரில் பயங்கரம் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கொலை - மகன் கைது


இருகூரில் பயங்கரம் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கொலை - மகன் கைது
x
தினத்தந்தி 25 Feb 2019 4:45 AM IST (Updated: 25 Feb 2019 1:32 AM IST)
t-max-icont-min-icon

கோவை இருகூரில், ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்திக்கொலை செய்ததாக அவருடைய மகனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

சிங்காநல்லூர்,

கோவை இருகூர் அண்ணா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 70). சிங்காநல்லூரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த இவர் கடந்த 2006-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவருக்கு பத்மினி என்ற மனைவியும், செந்தில்குமார் (42) உள்பட 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

செந்தில்குமார் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்துவிட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அவருடைய மனைவி தனது கணவரை பிரிந்து சென்றுவிட்டார்.

நேற்று மாலை, பத்மினி வெளியில் சென்று இருந்தார். வீட்டில் சுப்பிரமணி மட்டும் இருந்தார். அப்போது மதுபோதையில் வீட்டுக்கு வந்த செந்தில்குமாரை அவர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார் கத்தியை எடுத்து தந்தையின் நெஞ்சு, இடுப்பு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சுப்பிரமணி துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். உடனே செந்தில்குமார் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுப்பிரமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, செந்தில்குமாரை பல இடங்களில் போலீசார் தேடினார்கள். குடிபோதையில் இருகூர் பகுதியில் சுற்றித்திரிந்த அவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். 

Next Story