அன்னமங்கலத்தில் ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் 26 பேர் காயம்
அன்னமங்கலத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 26 பேர் காயம் அடைந்தனர்.
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. விழாவையொட்டி ஊருக்கு அருகாமையில் உள்ள வயல் பகுதியில் வாடிவாசல் மற்றும் பார்வையாளர்கள் கூடம் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை 9 மணியளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. இதனை மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி தொடங்கி வைத்தார். இதில் பெரம்பலூர், சேலம், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 250 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு களத்தில் இறங்கி காளைகளை அடக்கினர். இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 500 அலங்கரிக்கப்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. பார்வையாளர்கள் மாடுபிடி வீரர்களை கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.
வீரர்களும் காளைகளை போட்டிபோட்டுக்கொண்டு அடக்கினர். அப்போது கடம்பூரை சேர்ந்த சேரன்(வயது 23), மண்ணச்சநல்லூர் அகஸ்தியர்(28), இருங்களூர் நவீன்(20), பெரியம்மாபாளையம் வினோத்குமார்(27), அரும்பாவூர் விஷ்வா(27), அதே ஊரை சேர்ந்த விக்னேஷ்(23), பெரம்பலூர் முகமதுயூசூப்(23), வீரகனூர் தினேஷ்(22) உள்பட 20 வீரர்கள் மற்றும் 6 பார்வையாளர்கள் என மொத்தம் 26 பேர் காளைகள் முட்டியதில் காயமடைந்தனர். அவர்களுக்கு அருகில் இருந்த மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விழாவில் காளைகளை பிடித்த வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வெள்ளிக்காசு, சில்வர் பாத்திரம், கட்டில், மின்விசிறி, குக்கர் போன்ற பல்வேறு பரிசு பொருட்களை விழாக்குழுவினர் உடனுக்குடன் வழங்கினர். இந்த ஜல்லிக்கட்டு மாலை 3 மணி அளவில் நிறைவடைந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல், வருவாய் கோட்டாட்சியர் விசுவநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story