மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான “ஸ்கேட்டிங்” போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு + "||" + The state-level "skating" tournament is a gift for the winners

மாநில அளவிலான “ஸ்கேட்டிங்” போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

மாநில அளவிலான “ஸ்கேட்டிங்” போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
மாநில அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நடத்தப்பட்ட “ஸ்கேட்டிங்” போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் சார்பில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், 8 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் 8 வயதுக்கு மேல் 16 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கும் 3-ம் ஆண்டு மாநில அளவிலான “ஸ்கேட்டிங்” போட்டி பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஸ்கேட்டிங் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 8 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நேற்று முன்தினம் நடந்த “ஸ்கேட்டிங்” போட்டியில் 300 பேர் பங்கேற்றனர். நேற்று 8 வயதுக்கு மேல், 16 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரிங் 1, ரிங் 2, ரிங் 2 ஏ ஆகிய 3 பிரிவுகளில் “ஸ்கேட்டிங்” போட்டி தனித்தனியாக நடத்தப்பட்டன.


இதில் பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500 பேர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் 3 பிரிவுகளில் நடத்தப்பட்ட “ஸ்கேட்டிங்” போட்டியில் முதல் இடம் பிடித்த வீரர்- வீராங்கனைகளுக்கு தங்க பதக்கமும், 2-ம் இடம் பிடித்தவர்களுக்கு வெள்ளி பதக்கமும், 3-ம் இடம் பிடித்தவர்களுக்கு வெண்கலப்பதக்கமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. மேலும் 4 முதல் 6-ம் இடம் வரை பிடித்தவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சங்கத்தினர் செய்திருந்தனர்.