2-வது நாளாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்: கலெக்டர் கந்தசாமி ஆய்வு
2-வது நாளாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாமை கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை கடந்த மாதம் 31-ந் தேதி கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்டார். இந்த வாக்காளர் பட்டியலில் 9 லட்சத்து 71 ஆயிரத்து 811 ஆண் வாக்காளர்களும், 9 லட்சத்து 99 ஆயிரத்து 430 பெண் வாக்காளர்களும், 76 இதர வாக்காளர்களும் என மொத்தம் 19 லட்சத்து 71 ஆயிரத்து 317 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை அறிந்து கொள்ள அனைத்து தாலுகா அலுவலகங்கள், வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் சுருக்க முறையில் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் இம்மாதம் 2 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று முன்தினம் மற்றும் நேற்று இந்த முகாம்கள் மாவட்டத்தில் உள்ள 2,372 வாக்குச்சாவடிகள் அடங்கிய 1,271 மையங்களில் நடந்தது.
இதில் புதிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றிற்கான விண்ணப்ப படிவங்களை பொதுமக்கள் வழங்கினர். நேற்று 2-வது நாளாக நடந்த இந்த சிறப்பு முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.
திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமை மாவட்ட கலெக்டர் கந்தசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது அவருடன் வருவாய்த்துறை அதிகாரிகள், தேர்தல் பிரிவு அதிகாரிகள் இருந்தனர்.

Related Tags :
Next Story