தனுஷ்கோடி பகுதியில் இந்திய கடலோர காவல்படையினர் தீவிர ரோந்து


தனுஷ்கோடி பகுதியில் இந்திய கடலோர காவல்படையினர் தீவிர ரோந்து
x
தினத்தந்தி 25 Feb 2019 4:47 AM IST (Updated: 25 Feb 2019 4:47 AM IST)
t-max-icont-min-icon

தனுஷ்கோடி கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து படகு மூலமாக பீடி பண்டல், பீடி இலை, கடல் அட்டைகள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அவ்வப்போது கடத்தல்காரர்கள் மூலம் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ராமேசுவரம் பகுதியில் இருந்து கள்ளத்தனமாக படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 1,700 கிலோ பீடி இலை பண்டல்களை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பா 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து ராமேசுவரம் முதல் தனுஷ்கோடி வரை உள்ள கடல் பகுதிகளில் மீனவர்கள் என்ற போர்வையில் கடத்தல்காரர்கள் யாரும் படகுகளில் சுற்றித்திரிகின்றனரா என்று இந்திய கடலோர காவல் படையினர் தரையிலும், தண்ணீரிலும் அதிவேகமாக செல்லும் ஹோவர் கிராப்ட் கப்பல் மூலம் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

குறிப்பாக, தனுஷ்கோடி அருகே நடுக்கடல் பகுதியில் உள்ள இந்திய எல்லைப் பகுதியான 5–வது மணல் திட்டு மற்றும் பாம்பன் குந்துகால் அருகே உள்ள சிங்கிலித் தீவு, குருசடை தீவு பகுதிகளிலும் தீவிர ரோந்து பணியில் இந்திய கடலோர காவல் படையினர் ஈடுபட்டனர்.


Next Story