எலகங்கா தீவிபத்துக்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும் எடியூரப்பா பேட்டி


எலகங்கா தீவிபத்துக்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும் எடியூரப்பா பேட்டி
x
தினத்தந்தி 25 Feb 2019 5:37 AM IST (Updated: 25 Feb 2019 5:37 AM IST)
t-max-icont-min-icon

எலகங்கா தீவிபத்துக்கு மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூருவில் நடைபெற்ற விமான கண்காட்சி ஒரு சர்வதேச நிகழ்ச்சி. அங்கு வசதிகளை செய்து கொடுப்பது மாநில அரசின் கடமை. ஆனால் அங்கு தீவிபத்து ஏற்பட்டு, ஏராளமான கார்கள் எரிந்துவிட்டன.

இந்த சம்பவத்திற்கு மாநில அரசே ெபாறுப்பேற்க வேண்டும். மாநில அரசின் அலட்சியத்தால் இந்த சம்பவம் நடந்துள்ளது. முதல்-மந்திரி மற்றும் போலீஸ் மந்திரி ஆகியோர், இதற்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லை என்பது போல் பேசுகிறார்கள்.

சிறிய தவறுகள், நாட்டின் பெருமைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைகிறது. அதனால் கர்நாடக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. தீயணைப்பு வாகனங்கள் அங்கு நிறுத்தப்படவில்லை.

அதன் காரணமாக தீவிபத்தில் 300 கார்கள் எரிந்து நாசமாகி இருக்கின்றன. இதுகுறித்து உயர்மட்ட அளவில் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

அதைத்தொடர்ந்து எடியூரப்பா எலகங்காவுக்கு நேரில் சென்று, தீவிபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Next Story