‘‘ராணுவத்தில் நான் சேருவது கணவருக்கு செலுத்தும் அஞ்சலி’’ உயிரிழந்த அதிகாரியின் மனைவி உருக்கம்
‘‘ராணுவத்தில் நான் சேருவது, கணவருக்கு செலுத்தும் அஞ்சலி’’ என பணியில் உயிரிழந்த ராணுவ அதிகாரியின் மனைவி உருக்கமாக கூறியுள்ளார்.
வசாய்,
பால்கர் மாவட்டம் விராரை சேர்ந்தவர் கவுரி மகாதிக் (வயது32). இவரது கணவர் மேஜர் பிரசாத் மகாதிக் கடந்த 2017-ம் ஆண்டு இந்திய - சீன எல்லையில் பணியில் இருந்த போது தீ விபத்தில் பலியானார். இதையடுத்து தனியார் நிறுவனத்தின் நிறுவன செயலாளர், வக்கீலாக இருந்த கவுரி மகாதிக் தனது பணியை ராஜினாமா செய்தார்.
மேலும் ராணுவத்தில் சேர, தேர்வுக்காக பயிற்சி பெற்றார். இந்தநிலையில் சமீபத்தில் ராணுவ தேர்வை எழுதிய கவுரி மகாதிக் அதில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவருக்கு ஏப்ரல் மாதம் முதல் 49 வாரங்களுக்கு சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சி நடைபெற உள்ளது.
இந்தநிலையில் ராணுவத்தில் பணி செய்ய உள்ளது குறித்து கவுரி மகாதிக் கூறியதாவது:-
எனது கணவர் கடந்த 2012-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். நாட்டுக்காக ராணுவத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவார் என அவருடன் வேலை பார்த்த ராணுவ அதிகாரிகள் கூறுவார்கள். நான் ராணுவத்தில் சேருவது எனது கணவருக்கு செலுத்தும் அஞ்சலி. இவ்வாறு அவர் உருக்கமாக கூறினார்.

Related Tags :
Next Story