கவர்னர் உரையுடன் மராட்டிய சட்டசபை இன்று கூடுகிறது 27-ந்தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல்
கவர்னர் உரையுடன் மராட்டிய சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. 27-ந் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
மும்பை,
முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜனதா அரசின் பதவிக்காலம் வரும் அக்டோபர் மாதம் முடிவுக்கு வருகிறது.
தேவேந்திர பட்னாவிஸ் அரசின் கடைசி பட்ஜெட் கூட்டம் இதுவாகும்.
நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் மார்ச் மாதத்தில் நடைமுறைக்கு வரவுள்ளது. அதற்குள் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரை முடிக்கவேண்டும் என்பதால் 6 நாட்களில் கூட்டத்தொடரை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இன்று கவர்னர் வித்யாசாகர் ராவ் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. துணை மானிய கோரிக்கைகள் நாளை தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.
பின்னர் 27-ந்தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 28-ந்தேதி பட்ஜெட் மீதான விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.
1-ந்தேதி மற்றும் 2-ந்தேதிகளில் மாநிலத்தில் நிலவும் வறட்சி நிலை குறித்த விவாதம் நடைபெறும் என்று தெரிகிறது.
இந்த இடைக்கால பட்ஜெட்டில் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்ற தகவல் கசிந்துள்ளது.
இந்தநிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி முதல்-மந்திரி அளித்த தேநீர் விருந்தை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. முன்னதாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகேபாட்டீல், மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே உள்ளிட்ட கட்சி தலைவர்கள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது தனஞ்செய் முண்டே கூறியதாவது:-
சமீபத்தில் மத்திய மந்திரி பியூஸ் கோயல் வெளியிட்ட நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் போன்று, இந்த சட்டமன்ற இடைக்கால பட்ஜெட்டும் இருக்காது என நம்புகிறேன்.
மாநில சட்டசபையில் உள்ள சுமார் 11 மந்திரிகள் ஊழல் குற்றச்சாட்டுகளை சந்தித்துள்ளனர். எங்களுக்கு இந்த அரசின் மீதான நம்பிக்கை பறிபோய்விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகேபாட்டீல் கூறுகையில், “பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் அரசை வழிநடத்தும் முறை துளியும் மகிழ்ச்சி அளிக்கவில்லை.
பயிர்க்கடன் தள்ளுபடி மற்றும் நீர் சேமிப்பு திட்டங்களில் பெரும் ஊழல் நடந்திருப்பது உறுதியாகியும், இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே இடைக்கால பட்ஜெட்டை முன்னிட்டு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஏற்பாடு செய்துள்ள தேநீர் விருந்தை நாங்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்” என்றார்.

Related Tags :
Next Story