உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை


உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
x
தினத்தந்தி 26 Feb 2019 4:00 AM IST (Updated: 26 Feb 2019 12:57 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியில் உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் 100-க்கு மேற்பட்ட விவசாயிகள் தட்கல் முறையில் மும்முனை மின்சாரம் வழங்க பணம் கட்டி முன்பதிவு அடிப்படையில் காத்து இருக்கின்றனர். இந்த பகுதியில் மட்டும் 110 விவசாயிகள் தட்கல் முறையில் பதிவு செய்து உள்ளனர். இந்நிலையில் கடந்த 6 மாதங்களில் சுமார் 24 விவசாயிகளுக்கு மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் பதிவு மூப்பு அடிப்படையில் வழங்காததால் விவசாயிகள் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த உதவி மின் பொறியாளர் பார்த்தசாரதி விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி 2 மாதத்தில் பதிவு மூப்பு அடிப்படையில் மும்முனை மின்சாரம் விவசாயிகளுக்கு வழங்குவதாக உறுதி அளித்ததின் பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனர். 

Next Story