புயல் நிவாரணம் வழங்க கோரி குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் மனு
கஜா புயல் நிவாரணம் வழங்க கோரி குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார். கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் கொடுத்த மனுவில், புதுக்கோட்டை நகராட்சி 39-வது வார்டுக்கு உட்பட்ட சுப்பிரமணியன் நகரில் கடந்த பல மாதங்களாக குடிநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு குடிநீர் வருவது தடைபட்டு உள்ளது. இதனை சரி செய்து முறையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
திருமயம் தாலுகா துலையனூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், நாங்கள் கல்குவாரியில் வேலை செய்து வருகிறோம். இதில் இருந்து வரும் வருமானம் எங்களின் குடும்ப செலவுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் சண்முகம் கொடுத்த மனுவில், புதுக்கோட்டையில் பழைய மருத்துவமனை செயல்பட்ட இடத்தில் தாலுகா மருத்துமனை அமைக்க மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
மணமேல்குடி தாலுகா கோட்டைப்பட்டினம் சதாம் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், நாங்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறோம். நாங்கள் மிகவும் வறுமையில் வாழ்ந்து கொண்டு வருகிறோம். எனவே எங்களை வறுமை கோட்டிற்கு கீழ் சேர்க்க வேண்டும் என கூறியிருந்தனர்.
திருக்கட்டளை ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், திருக்கட்டளை ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு கஜா புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் முறையாக வழங்கப்படவில்லை. மேலும் இங்கு மாடிவீடுகளில் இருப்பவர்களுக்கும், அரசு அலுவலர்களுக்கும் நிவாரணம் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. எனவே இது குறித்து கலெக்டர் நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக புயல் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.
இலுப்பூர் தாலுகா கோங்குடிப்பட்டி ஊராட்சியை சேர்ந்த பன்னீர்பட்டி, சின்னக்குறும்பபட்டி கிராம பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 100 குடும்பங்கள் உள்ளன. இதில் 20 குடும்பங்களுக்கு மட்டும் கஜா புயல் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 80 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் கிடைக்கவில்லை. இது குறித்து கிராம நிர்வாக அதிகாரியிடம் கேட்டதற்கு அவர் முறையாக பதில்கூறவில்லை. எனவே எங்களுக்கு நிவாரண பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

Related Tags :
Next Story