மோகனூர், குமாரபாளையம் பகுதிகளில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
மோகனூர், குமாரபாளையம் பகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மோகனூர்,
மோகனூர் ஒன்றிய, நகர, அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவையொட்டி, பஸ் நிலையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து எம்.ஜி.ஆர். சிலை வரை அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக சென்றனர். பின்னர் அவர்கள் எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அங்கு வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அங்கு கூடியிருந்தவர்களுக்கு இனிப்பு வழங்கினர்.
விழாவிற்கு மோகனூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கருமண்ணன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் தங்கமுத்து அனைவரையும் வரவேற்றார். மாவட்ட மாணவரணி செயலாளர் சந்திரமோகன், பேரூர் முன்னாள் செயலாளர் புரட்சிபாலு, பேரூர் துணைச்செயலாளர்கள் சிவஞானம், செல்வி நவவடி, ஒன்றிய இணைச்செயலாளர், மலர்விழி செல்வராஜ், முன்னாள் கவுன்சிலர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் உமாராணி உமாபதி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர்கள் அம்மையப்பன் (லத்துவாடி), ராமலிங்கம் (செவிட்டுரங்கன் பட்டி), திருக்குமரன் (பாலப்பட்டி), சதாசிவம், (குமரிபாளையம்), பேரூராட்சி ஜெயலலிதா பேரவை தலைவர் சேனாபதி, மாவட்ட தொழில் நுட்ப பிரிவு பாண்டியன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் வளர்மதி செல்வம், பேரூராட்சி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன், கூட்டுறவு கடன் சங்க இயக்குனர் முருகவேல், 5-வது வார்டு செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பஸ் நிலையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மோகனூர் சர்க்கரை ஆலை வண்டிகேட் பகுதியில், மாவட்ட மாணவரணி சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அணியாபுரத்தில் நடைபெற்ற விழாவில், கூட்டுறவு கடன் சங்க தலைவர் ராமச்சந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுதாகர், அரசநத்தத்தில் நடைபெற்ற விழாவில் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் ரவிச்சந்திரன், பெரமாண்டம்பாளையத்தில், மணப்பள்ளி கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சிதம்பரம், சின்ன பெத்தாம்பட்டி ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தியாகராஜன், உள்பட பலர் கலந்து கொண்டனர். என்.புதுப்பட்டி, எஸ்.வாழவந்தி, செங்கப்பள்ளி, மணப்பள்ளி, லத்துவாடி உள்பட ஒன்றிய, நகர வார்டு பகுதிகளில் பிறந்தநாள் விழாவையொட்டி இனிப்பும், அன்னதானமும் வழங்கி கொண்டாடினார்.
குமாரபாளையத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கட்சியின் நகரச்செயலாளர் ஏ.கே.நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் நகரசபை தலைவர் சிவசக்தி தனசேகரன் முன்னிலை வகித்தார். குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரி நோயாளிகளுக்கு, பால், பன், பழம் ஆகியவை வழங்கப்பட்டது. மேலும் ஆனங்கூர் பிரிவு ரோட்டில் தொடங்கி பஸ்நிலையம் வரை அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக பஸ் நிலையம் வரை சென்றனர். அங்கு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். மேலும் மேற்கு காலனி தேவி கருமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதில் முன்னாள் நகரசபை துணைத்தலைவர் கே.எஸ்.எம்.பாலசுப்பிரமணி, முன்னாள் நகரச்செயலாளர் குமணன், அவைத்தலைவர் எஸ்.என்.பழனிசாமி, பொருளாளர் கே.ஆர்.பாஸ்கரன் நகர துணைச்செயலாளர் திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story