தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்
தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
கரூர்,
தமிழகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் செல்லும் எடப்பாடி பழனிசாமி அரசின் 2 ஆண்டுகால சாதனைகளை பட்டியலிட்டு விளக்கும் வகையில், கரூர்் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் கரூர் பஸ் நிலையத்தில் நேற்று புகைப்பட கண்காட்சி நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். கண்காட்சியை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
கண்காட்சியில், தமிழக அரசின் திட்டங்கள் மூலம் பயனாளிகளுக்கு வழங்கிய நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவை தொடர்பாக புகைப் படங்கள் இடம் பெற்றிருந்தன. எடப்பாடி பழனிசாமி அரசு பதவியேற்று வழிநடத்துகிற இந்த 2 ஆண்டுகளில் பொதுமக்களுக்கு செயல்படுத்தப்பட்ட எண்ணற்ற நலத்திட்டங்களின் விவரங்கள் அடங்கிய விளக்க கையேட்டினை போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிட அதனை மாவட்ட கலெக்டர் பெற்று கொண்டார். அதனை தொடர்ந்து அந்த கையேடு பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து “சாதனைகள் ஈராண்டு தொடரும் பல்லாண்டு” என்ற வாசகம் பொருந்திய ஒட்டு வில்லைகளை அரசுப்பஸ்களின் முகப்புக்கண்ணாடியில் அமைச்சர் ஒட்டினார்.
இதையடுத்து செய்தி மக்கள் தொடர்புத்துறையால் தயாரிக்கப்பட்ட பெண்குழந்தைகளின் முன்னேற்றம் குறித்த “குழந்தை பாதுகாப்புக்கு சில யோசனைகள்” என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள, பெண்குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பல விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய மதிப்பேடு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் 2 ஆண்டு சாதனைகள் பற்றிய வீடியோ தொகுப்பு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு விளம்பர வாகனத்தி்ல் ஒளிபரப்பு செய்யப்பட்டதை பொதுமக்கள், அரசுஅதிகாரிகள் உள்பட பலரும் கண்டுகளித்தனர்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், ஊரக வளர்ச்சி முகமைதிட்ட இயக்குனர் கவிதா, வருவாய் கோட்டாட்சியர் சரவணவமூர்த்தி, செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி பாவேந்தன், போக்குவரத்து கழக பொது மேலாளர் குணசேகரன், நகராட்சி ஆணையர் ராஜேந்திரன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) செந்தில்குமார் மற்றும் மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், மாவட்ட துணை செயலாளர் பி.சிவசாமி, முன்னாள் கூட்டுறவு வேளாண் வங்கி தலைவர் பேங்க் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story