ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு ரூ.2½ கோடியில் புதிய கட்டிடம் பணிகளை அமைச்சர் நிலோபர்கபில் தொடங்கி வைத்தார்


ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு ரூ.2½ கோடியில் புதிய கட்டிடம் பணிகளை அமைச்சர் நிலோபர்கபில் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 26 Feb 2019 3:15 AM IST (Updated: 26 Feb 2019 1:51 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்துக்கு ரூ.2½ கோடியில் புதிய அலுவலகம் கட்டும் பணிகளை அமைச்சர் நிலோபர்கபில் தொடங்கி வைத்தார்.

வாணியம்பாடி, 

ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் தொடங்கப்பட்டு பல ஆண்டுகளாக ஆவதால் இந்த அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட தமிழக அரசு ரூ.2.63 கோடி ஒதுக்கீடு செய்தது.

இதனையடுத்து புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்கான பணிகளுக்கு பூமி பூஜையுடன் தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர் நிலோபர்கபில் கலந்து கொண்டு பூமி பூஜை போட்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கோவி.சம்பத்குமார், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோபால், முன்னாள் துணை தலைவர் அண்ணாசாமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் மஞ்சுளாகந்தன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஜெயசக்தி,

கூட்டுறவு சங்க துணை தலைவர் கே.பி.மணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வின்சென்ட் ரமேஷ்பாபு, வசந்தி, மாவட்ட செயற்பொறியாளர் ராஜவேல், உதவி செயற்பொறியாளர் பழனிசாமி, உதவி பொறியாளர்கள் கார்த்திகேயன், சையத்கலீல்அகமது, அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் சதீஷ்குமார், அருண், சுமையா மற்றும் அரசு அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story