அரசு பஸ்சில் இருந்து தவறி விழுந்த பாலிடெக்னிக் மாணவர் சாவு டிரைவர் கைது


அரசு பஸ்சில் இருந்து தவறி விழுந்த பாலிடெக்னிக் மாணவர் சாவு டிரைவர் கைது
x
தினத்தந்தி 26 Feb 2019 3:45 AM IST (Updated: 26 Feb 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

வலங்கைமான் அருகே அரசு பஸ்சில் இருந்து தவறி விழுந்த பாலிடெக்னிக் மாணவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ்சின் டிரைவரை கைது செய்தனர்.

வலங்கைமான்,

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் பூண்டி குடியான தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன். இவருடைய மகன் ராஜேஷ் (வயது18). இவர் வலங்கைமானில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு மின்னியல் படித்து வந்தார்.

இவர் கல்லூரிக்கு பஸ்சில் சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் கல்லூரியில் இருந்து வீட்டுக்கு அரசு பஸ்சில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக பஸ்சின் படிக்கட்டில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ராஜேஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஆண்டித்தோப்பு பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் (42) என்பவரை கைது செய்தனர்.

Next Story