திருப்பூர் அருகே தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன்நகை திருட்டு - மர்ம ஆசாமிகள் கைவரிசை
தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன்நகை மற்றும் ரூ.70 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர்.
நல்லூர்,
திருப்பூர் அருகே தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன்நகை மற்றும் ரூ.70 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீநாத் (வயது 36). இவருடைய மனைவி அஞ்சலி (28). இவர்களுடைய மகன் சபரிநாதன் (3). இவர்கள் திருப்பூர், முத்தணம்பாளையத்தில் சபரி பிரியா நகரில் கடந்த 3 வருடங்களுக்கு முன் சொந்தமாக வீடு வாங்கி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர் திருப்பூர் காதர் பேட்டை கரிய கவுண்டர் வீதியில் 5 ஆண்டுகளாக செகன்ஸ் பனியன் குடோன் நடத்தி வருகிறார். ஸ்ரீநாத் வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டில் ஸ்ரீநாத்தின் உறவினர் ஒருவர் குடியிருந்து வருகிறார்.
தொழிலதிபரான இவர் வீட்டை பூட்டி விட்டு ஸ்ரீநாத் தனது குடும்பத்துடன் கடந்த 23-ந் தேதி இரவு கண்ணூருக்கு சென்று விட்டார். இந்த நிலையில் பக்கத்து வீட்டில் குடியிருந்து வரும் உறவினர் வீட்டில் இருந்து வெளியே வந்தபோது ஸ்ரீநாத் வீட்டின் காம்பவுண்டு கேட் சாத்தப்பட்ட நிலையில், வீட்டினுள் மட்டும் விளக்கு எரிவதை, பார்த்துள்ளார். மேலும் வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது. ஸ்ரீநாத் ஊருக்கு சென்றுள்ள நிலையில் அவருடைய வீட்டின் கதவு திறந்து கிடப்பதும், வீட்டில் விளக்கு எரிவதும், கதவு திறந்து கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து அவர், திருப்பூர் ஊரக போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார், சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கு விரைந்து சென்றனர். அப்போது ஸ்ரீநாத் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.
பின்னர் உள்ளே சென்று போலீசார் பார்த்தபோது வீட்டில் இருந்த 2 பீரோக்களும் திறக்கப்பட்டு, அதில் இருந்த துணிகள் சிதறிக்கிடந்தன. இது குறித்து வீட்டின் உரிமையாளர் ஸ்ரீநாத்துக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். உடனே அவர், திருப்பூர் விரைந்து வந்தார். அவரிடம் போலீசார் விசாரித்தபோதுதான், பீரோவில் வைத்து இருந்த 45 பவுன்நகை மற்றும் ரூ.70 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.
ஸ்ரீநாத் கேரளா சென்றவதை தெரிந்து கொண்ட மர்ம ஆசாமிகள், அவருடைய வீட்டிற்கு சென்று வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் வைத்து இருந்த 45 பவுன்நகை மற்றும் ரூ.70 ஆயிரத்தை திருடி சென்று உள்ளனர்.
இது குறித்து ஊரக காவல் நிலையத்தில், ஸ்ரீநாத் புகார் செய்தார். புகாரின் பெயரில் ஊரக இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து ஸ்ரீநாத் வீட்டில் திருடிய மர்ம ஆசாமிகளை தேடிவருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story