சுகாதார போக்குவரத்துத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சுகாதார போக்குவரத்துத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Feb 2019 4:15 AM IST (Updated: 26 Feb 2019 2:43 AM IST)
t-max-icont-min-icon

சுகாதாரப் போக்குவரத்துத்துறை ஊழியர் சங்கம் சார்பில் பணிமனை ஊழியர் விரோத போக்கை கண்டித்து திருச்சி விமானநிலையம் எதிரே உள்ள சுகாதார போக்குவரத்துத்துறை பணிமனை முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருச்சி,

தமிழ்நாடு அரசு சுகாதாரப் போக்குவரத்துத்துறை ஊழியர் சங்கம் சார்பில் பணிமனை ஊழியர் விரோத போக்கை கண்டித்து திருச்சி விமானநிலையம் எதிரே உள்ள சுகாதார போக்குவரத்துத்துறை பணிமனை முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். சுகாதார போக்குவரத்துத்துறை ஊழியர் சங்க மாநில செயலாளர் கோவிந்தராஜ், மாநில தலைவர் நடராஜன், பொதுச்செயலாளர் நாகராஜன், நெடுஞ்சாலை சாலை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் ஜீவானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 2017-ம் ஆண்டு சென்னையில் நடந்த கவுன்சிலிங்போது திருச்சி மண்டலத்தில் இருந்து ஒப்படைக்கப்பட்ட 4 பணியிடங்களை மீண்டும் திருச்சி பணிமனைக்கே கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும். பணிமனை முழுவதும் பொருத்தப்பட்ட கேமராக்களை அகற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. 

Next Story