காட்பாடி அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.1¼ கோடி மோசடி போலீஸ்சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்


காட்பாடி அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.1¼ கோடி மோசடி போலீஸ்சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்
x
தினத்தந்தி 26 Feb 2019 3:00 AM IST (Updated: 26 Feb 2019 2:59 AM IST)
t-max-icont-min-icon

காட்பாடி அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.1¼ கோடி மோசடி செய்து விட்டதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

வேலூர், 

காட்பாடியை அடுத்த வெப்பாலை பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார்மனு கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

காட்பாடியை அடுத்த மேல்பாடி கிராமத்தை சேர்ந்த ஒருவர் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். அவர் பல்வேறு தொகைகளில் சீட்டு நடத்தினார். இதை அறிந்த எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்களும் அவரிடம் சீட்டு கட்டிவந்தோம். சீட்டு கட்டி முடித்ததும் நாங்கள் கட்டிய சீட்டுத்தொகையை கேட்டோம்.

அதற்கு அவர் தருவதாகக்கூறி காலம் கடத்திவந்தார். தற்போது அவர் நாங்கள் கட்டிய பணத்தை தராமல் ஏமாற்றி வருகிறார். 20-க்கும் மேற்பட்ட நாங்கள் கட்டிய பணத்துடன் சேர்த்து பலரிடம் ரூ.1 கோடியே 42 லட்சம் வரை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்துள்ளார்.

இதனால் சிறுக சிறுக சேர்த்து கட்டிய பணம் மொத்தமாக கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த எங்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. எனவே சீட்டு நடத்தி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுத்து நாங்கள் கட்டிய பணத்தை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறி உள்ளனர்.

Next Story