செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த 2 வாலிபர்கள் கைது


செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 26 Feb 2019 3:15 AM IST (Updated: 26 Feb 2019 3:35 AM IST)
t-max-icont-min-icon

செல்போனால் ஏற்பட்ட தகராறில் நண்பரை கொலை செய்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பை,

மும்பை, பைதோனி பகுதியை சேர்ந்தவர் மன்சூர் சேக்(வயது22). இவரது நண்பர் சூரஜ்(22). இவர் செல்போன் ஒன்றை விற்க விரும்பினார். அந்த செல்போனை பயன்படுத்தி பார்த்துவிட்டு பணம் தருவதாக கூறி மன்சூர் சேக் வாங்கி உள்ளார். சுமார் ஒரு மாதம் அந்த செல்போனை மன்சூர் சேக் பயன்படுத்தி உள்ளார். இந்தநிலையில் அந்த செல்போனில் பல குறைகள் இருந்ததால் அதை நண்பர் சூரஜிடம் திருப்பி கொடுக்க மன்சூர் சேக் முடிவு செய்தார்.

எனவே அவர் சம்பவத்தன்று செல்போனை கொடுக்க சூரஜின் வீட்டுக்கு சென்றார். அப்போது ஒரு மாதம் கழித்து செல்போனை திருப்பி கொடுக்கிறாயே என சூரஜ், மன்சூர் சேக்கிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த சூரஜ் மற்றொரு நண்பரான பிட்டு தாஸ்(24) என்பவருடன் சேர்ந்து மன்சூர் சேக்கை சரமாரியாக தாக்கினார். இதில், பலத்த காயம் அடைந்த அவர் கீழே சரிந்தார்.

இந்தநிலையில் அவரை காணாமல் தேடிவந்த சூரஜின் பாட்டி அவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பேரனை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு தூக்கிச்சென்றார். அங்கு மன்சூர் சேக்கை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் செல்போனுக்காக நண்பனை அடித்து கொலை செய்த சூரஜ் மற்றும் பிட்டு தாசை கைது செய்தனர்.

Next Story