விவசாய விளைபொருட்களை எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கு, சுங்கச்சாவடியில் கட்டண விலக்கு - தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை
விவசாய விளை பொருட்களை எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கு, சுங்கச்சாவடியில் கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
ராயக்கோட்டை,
ராயக்கோட்டை அருகே உள்ள திம்ஜேப்பள்ளியில் தமிழக விவசாயிகள் சங்க கூட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மத்திய மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் ராஜன், கிளை துணை தலைவர் முருகேசன், கிளை செயலாளர் சம்பத்குமார், மாவட்ட துணைத்தலைவர் சந்திர சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளைத்தலைவர் மாதேஷ்குமார் வரவேற்றார்.
கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.எம்.ராமகவுண்டர் கலந்து கொண்டு, விவசாயிகள் சங்க கொடியை ஏற்றி வைத்து பேசினார். கூட்டத்தில் தென்பெண்ணை ஆற்றில் இருந்து தனி கால்வாய் அமைத்து, நாகமங்கலம், முத்தம்பட்டி, சிக்கேகவுண்டனூர், வெங்கட்ராமசெட்டி ஏரி, திம்ஜேப்பள்ளி ஏரி, பெரிய ஏரி ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் விட வேண்டும்.
காட்டுப்பன்றிகளை சுட அனுமதித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதுடன், அதே நேரத்தில் அதற்கு விதிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை முழுமையாக நீக்கி விட்டு விவசாயிகளுக்கு துப்பாக்கி உரிமம் கொடுக்க வேண்டும். காட்டு யானைகளால் உயிர் சேதம் ஏற்பட்டால் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ராயக்கோட்டை சுற்று வட்டாரத்தில் விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானைகளை கர்நாடகாவிற்கு விரட்டிட வேண்டும்.
வாணி ஒட்டு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலையை அரசே நிர்ணயிக்க வேண்டும். விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடியில் கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
இதில் முன்னாள் ஊராட்சி தலைவர் ஸ்ரீராமுலு, மேற்கு மாவட்ட பொருளாளர் சுப்பிரமணிய ரெட்டி, செயலாளர் ராஜா, விவசாய சங்க நிர்வாகிகள் அசோக்குமார், மகளிர் அணி நிர்வாகி பெருமா, மாவட்ட மஞ்சள் சங்க செயலாளர் ஜெயபால், ஒன்றிய தலைவர் தணிகாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிளை பொருளாளர் பாண்டுரங்கன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story