டாக்டர் ராமதாசுடன் ரங்கசாமி சந்திப்பு


டாக்டர் ராமதாசுடன் ரங்கசாமி சந்திப்பு
x
தினத்தந்தி 28 Feb 2019 5:00 AM IST (Updated: 28 Feb 2019 1:54 AM IST)
t-max-icont-min-icon

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி சந்தித்து பேசினார்.

புதுச்சேரி,

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க., என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள் இணைந்துள்ளன. இதில் என்.ஆர்.காங்கிரசுக்கு புதுவை எம்.பி. தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இங்கு முன்னாள் எம்.எல்.ஏ. கேசவனின் மகனான டாக்டர் நாராயணசாமி என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. இதையொட்டி கட்சி சார்பில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்தநிலையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவரான ரங்கசாமி நேற்று பிற்பகல் வானூர் தாலுகா தைலாபுரம் தோட்டத்துக்கு சென்றார். அங்கு அவர் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினார்.

அப்போது என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ள டாக்டர் நாராயணசாமியையும் அறிமுகப்படுத்தினார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய புதுவைக்கு வரவேண்டும் என்று டாக்டர் ராமதாசுக்கு ரங்கசாமி அழைப்பு விடுத்தார்.

இந்த சந்திப்பின்போது என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன், செயலாளர் என்.எஸ்.ஜே.ஜெயபால் எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Next Story