மாவட்ட செய்திகள்

கிருமாம்பாக்கத்தில் மனைப்பட்டா ரத்து செய்யப்பட்டவர்களுக்கு மாற்று இடம் அதிகாரிகளுக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவு + "||" + Alternative place for wedded cancellations The governor ordered the authorities

கிருமாம்பாக்கத்தில் மனைப்பட்டா ரத்து செய்யப்பட்டவர்களுக்கு மாற்று இடம் அதிகாரிகளுக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவு

கிருமாம்பாக்கத்தில் மனைப்பட்டா ரத்து செய்யப்பட்டவர்களுக்கு மாற்று இடம் அதிகாரிகளுக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவு
கிருமாம்பாக்கத்தில் மனைப்பட்டா ரத்து செய்யப்பட்டவர்களுக்கு மாற்று இடம் வழங்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார்.

பாகூர்,

ஏம்பலம் தொகுதிக்கு உட்பட்ட கிருமாம்பாக்கம் பகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் புதுச்சேரி – கடலூர் சாலையில் சாய்பாபா கோவில் அருகே இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் ஆட்சியில் புகார் எழுந்தது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார்.

இதையடுத்து இலவச மனைப்பட்டா ரத்து செய்யப்பட்டு, அந்த இடத்தில் பாட்கோ சார்பில் நவீன பல்நோக்கு கூடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான முதற்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த இடத்தை கவர்னர் பார்வையிடுவதற்காக நேற்று எல்லை அமைக்கப்பட்டு குச்சிகள் நடப்பட்டிருந்தது. இதை அறிந்த பட்டா பெற்றவர்கள், அங்கு திரண்டு வந்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் கவர்னர் கிரண்பெடி அந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பல்நோக்கு கூடத்தின் மாதிரி வரைபடத்தை கவர்னரிடம் அதிகாரிகள் காண்பித்தனர். வாகன நிறுத்தத்திற்கும், அவசர ஊர்திகள் சென்று வரும் வகையிலும் பசுமை கட்டிடமாக பல்நோக்கு கூடத்தை அமைக்க கவர்னர் ஆலோசனை கூறினார்.

அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், பட்டா ரத்து செய்யப்பட்டதை திரும்ப பெறவேண்டும் என்று கவர்னரிடம் முறையிட்டனர். இதுபற்றி துறை அதிகாரிகளிடம் கவர்னர் விளக்கம் கேட்டார். அதற்கு அரசு செயலர் ஆலீஸ் வாஸ், ரத்து செய்யப்பட்ட மனைப்பட்டாவிற்கு மாற்றாக பிள்ளையார்குப்பத்தில் பிற்படுத்தப்பட்டோர் விடுதிக்கு அருகே இடம் தேர்வு செய்து, அந்த இடம் நில அளவை துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அதனை அவர்கள் (நில அளவை துறை) மனைகளாக பிரித்து வழங்கிட வேண்டும் என்றார்.

அதற்கு கவர்னர் கிரண்பெடி, ரத்து செய்யப்பட்ட பட்டாதாரர்களுக்கு முதலில் மாற்று இடத்தில் பட்டா வழங்கிட வேண்டும். அதற்கு பிறகு தான் இந்த இடத்தில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


தொடர்புடைய செய்திகள்

1. வரும் கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளிலும் கம்ப்யூட்டர் மூலம் மாற்றுச்சான்றிதழ் பள்ளி கல்வித்துறை உத்தரவு
அனைத்து பள்ளிகளிலும் வரும் கல்வியாண்டில் கம்ப்யூட்டர் மூலம் மாற்றுச்சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
2. அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு குஜராத் கோர்ட்டு சம்மன் : மே 27–ந் தேதி ஆஜராக உத்தரவு
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு குஜராத் கோர்ட்டு சம்மன். மே 27–ந் தேதி ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
3. விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவு
புலனாய்வு துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து, விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
4. புதுச்சேரி கலெக்டராக அருண் ஐ.ஏ.எஸ். நியமனம்
புதுச்சேரி மாவட்ட கலெக்டராக அருண் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். கவர்னர் கிரண்பெடி இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
5. சிவகங்கை அரசு மகளிர் பள்ளியில் அமைச்சர் பாஸ்கரன் திடீர் ஆய்வு பழுதான வகுப்பறை கட்டிடத்தை அகற்ற உத்தரவு
சிவகங்கை அரசு மகளிர் பள்ளியில் அமைச்சர் பாஸ்கரன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது பழுதான வகுப்பறை கட்டிடத்தை அகற்ற உத்தரவிட்டார்.