வி.கைகாட்டி, தத்தனூர் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம்
பராமரிப்பு பணிகள் காரணமாக வி.கைகாட்டி, தத்தனூர் பகுதிகளில் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம் தேளூர் துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் வி.கைகாட்டி, ரெட்டிபாளையம், விளாங்குடி, தேளூர், நாகமங்கலம், நெரிஞ்சிக்கோரை, வெளிப்பிரிங்கியம், நாயக்கர்பாளையம், பெரியதிருக்கோணம், செட்டித்திருக்கோணம், விக்கிரமங்கலம், முனியங்குறிச்சி, நாச்சியார்பேட்டை, ஆதிச்சனூர், சுண்டக்குடி வாழைக்குழி, ஆண்டிப்பட்டாக்காடு, ஆலந்துறையார்கட்டளை, குணமங்கலம், கடம்பூர், பாளையக்குடி, காவனூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தேளூர் உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இதே போல் அரியலூர் மாவட்டம் நடுவலூர் துணை மின்நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் சுத்தமல்லி, பருக்கல், காக்காப்பாளையம், சுந்தரேசபுரம், வெண்மாண்கொண்டான், உல்லியக்குடி, சாத்தம்பாடி, காசாங்கோட்டை, தத்தனூர், பொட்டக்கொல்லை, மற்றும் மூர்த்தியான் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது.
இந்த தகவலை தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஜெயங்கொண்டம் உதவி செயற்பொறியாளர் சாந்தி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story