பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Feb 2019 3:06 AM IST (Updated: 28 Feb 2019 3:06 AM IST)
t-max-icont-min-icon

பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தேவகோட்டை,

தேவகோட்டை தாலுகாவை சேர்ந்த சிறுவத்தி, விஜயாபுரம், பரையநேந்தல், ஒரசூர், கற்களத்தூர், விருசூர், நாகமத்தி, கல்லங்குடி ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களுக்கு அரசு அறிவித்த பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று தேவகோட்டை தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது காப்பீட்டு தொகை எப்போது வழங்கப்படும் என்பது குறித்து விளக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் சங்கர், ராஜேந்திரன், மாணிக்கம், கண்ணன், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story