கீழக்கரை அருகே கோவில் உண்டியலில் பணம் திருடிய 2 பேர் கைது
கீழக்கரை அருகே கோவில் உண்டியலில் பணம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கீழக்கரை,
கீழக்கரை அருகே உள்ள புல்லந்தை அய்யனார் கோவிலில் இருந்த உண்டியலை கடந்த 21-ந்தேதி இரவு மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து ஏர்வாடி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து மர்ம நபர்களை அடையாளம் கண்டுபிடித்தனர். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ராமநாதபுரம் கே.கே.நகரை சேர்ந்த மாணிக்கம் மகன் முனீசுவரன்(வயது 23), குளத்தூரை சேர்ந்த அமானுல்லா மகன் அமீர்பாய்(32) ஆகியோர் ராமநாதபுரம் பஸ் நிலையம் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது ஏர்வாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்து கோவில் உண்டியலையும், அதில் இருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story