நாமக்கல்லில் ரூ.4.56 கோடியில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா வழங்கினர்


நாமக்கல்லில் ரூ.4.56 கோடியில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா வழங்கினர்
x
தினத்தந்தி 27 Feb 2019 10:15 PM GMT (Updated: 27 Feb 2019 10:25 PM GMT)

நாமக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில் 7 ஆயிரத்து 231 பேருக்கு ரூ.4 கோடியே 56 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் வழங்கினர்.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பி.ஆர்.சுந்தரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் 7,231 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 56 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மோட்டார் பொருத்தப்பட்ட அதிநவீன சக்கர நாற்காலிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 50 பயனாளிகளுக்கு ரூ.37 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் மோட்டார் பொருத்தப்பட்ட அதிநவீன சக்கர நாற்காலிகள், மகளிர் திட்டம் சார்பில் உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் 70 பயனாளிகளுக்கு ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்கள், சமூக நலத்துறையின் சார்பில் ஏழை பெண்களுக்கு விலையில்லா தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 135 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பீட்டில் விலையில்லா தையல் எந்திரங்கள், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 14 பெண்களுக்கு ரூ.3½ லட்சம் திருமண நிதிஉதவி மற்றும் 112 கிராம் தங்கம் உள்பட மொத்தம் 7,231 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 56 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.


பின்னர் பட்டுவளர்ச்சித் துறையின் சார்பில் மாவட்ட அளவில் சிறந்து விளங்கிய பட்டு விவசாயிகளுக்கு ரொக்க பரிசுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் முதலாம் பரிசு பெற்ற சாந்திக்கு பரிசுத் தொகையாக ரூ.25 ஆயிரம், இரண்டாம் பரிசு பெற்ற சிவக்குமாருக்கு ரூ.20 ஆயிரம், மூன்றாம் பரிசு பெற்ற மணிவேலுக்கு ரூ.15 ஆயிரம் என மொத்தம் 3 பயனாளிகளுக்கு ரூ.60 ஆயிரத்துக்கான பரிசு தொகையை அமைச்சர்கள் வழங்கினர்.

இந்த நிகழ்ச்்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், மகளிர் திட்ட இயக்குனர் டாக்டர் மணி, இணை இயக்குனர் (வேளாண்மை) சேகர், சமூக நலத்துறை அலுவலர் அன்பு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் உள்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story